உள்ளூர் செய்திகள்

தனித்தேர்வுகள் 23ம் தேதி தொடக்கம்; அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தனித்தேர்வு நடைபெறும். பிளஸ் 2 தனித்தேர்வுக்காக இணையதளம் மூலம் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் 10 ஆம் வகுப்பில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 95 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெறவில்லை. பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5 வரையிலும், பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1 வரையிலும் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்