அக்., 23ல் நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பட்டமளிப்பு விழா அக்., 23ம் தேதி நடக்கிறது. விழாவில் பல்கலை இணைவேந்தரும் தமிழக உயர்கல்வி அமைச்சருமான பொன்முடி, தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மொத்தம் 19 ஆயிரத்து 736 பேர் பட்டம் பெறுகின்றனர். 195 பேர் டாக்டர் பட்டம் பெறுகின்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்கலை வேந்தரான கவர்னர் பர்னாலா விழாவில் பங்கேற்க வாய்ப்பிலை என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.