வரும் 25ம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
ஈரோடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் திட்டமான, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, வரும் 25ம் தேதி, ஈரோடு, பி.எஸ்.பார்க் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நடக்க உள்ளது. இந்தாண்டு செயல் மற்றும் ஆராய்ச்சிக்கான மையக் கருப்பொருளாக, "காலநிலையும், திட்பவெப்ப நிலையும் புரிந்து கொள்வோம்" என்பதாகும். இதற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் விருப்பம் உள்ள, ஆசிரியர்கள் முன்பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.