உள்ளூர் செய்திகள்

செப்., 25 ல், துவங்கும் தனித்தேர்வு கால அட்டணை

ராமநாதபுரம்: எட்டாம் வகுப்புக்கான (இ.எஸ்.எல்.சி) செப்., 25 ல், துவங்கும் தனித்தேர்வு கால அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளர் ரேவதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: எட்டாம் வகுப்பு(இ.எஸ்.எல்.சி) தனித்தேர்வுகள் செப்.,25 ல் துவங்கி, செப்., 30 ல் முடிகின்றன. இதன்படி, செப்., 25 ல்- தமிழ், 26 ல் -ஆங்கிலம், 27 ல்- கணிதம், 29 ல்- அறிவியல், 30 ல்- சமூக அறிவியல். தேர்வுகள் தினமும் காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. தேர்வு விவரங்கள் பற்றி மண்டல துணை இயக்குனரகம், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tndge.in என்ற இணையதள முகவரியில் தனித்தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்