நவ., 25 மற்றும் 26ல் பணி நியமன கலந்தாய்வு
மதுரை: மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.