நவம்பர் 29ம் தேதி 50 மையங்களில் கேட் தேர்வு ரத்து
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.நவம்பர் 29ம் தேதி நடைபெற இருந்த ஆன்லைன் கேட் தேர்வுகள், சர்வர் இணைப்பில் தொடரும் கோளாறு காரணமாக 50 மையங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் இத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வுகளை எழுதி முடித்துள்ளனர் தேர்வுகள் நடைபெறாத மையங்களில் உரிய பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்ற போதுதான், மையங்களில் கம்ப்யூட்டர் பழுது ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பல மாணவர்களுக்குத் தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ள விவரங்கள் கூறப்படவில்லை என்று மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.