குரூப்-2A தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2Aல் (நேர்முக தேர்வு அல்லாத ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய 1863 மற்றும் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கிய அறிவிக்கையினை வெளியிட்டது. இப்பதவிகளுக்கு இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நிரந்தரப்பதிவு அவசியம் என்பதாலும் நிரந்தரப்பதிவு முடித்து நிரந்தரப்பதிவுக்கட்டணம் செலுத்திய பின்னரே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதாலும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க தேர்வாணையம் முடிவு செய்து மேற்படி தேர்விற்கு இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 18.11.2015 வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் 20.11.2015 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.