உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் 30 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில். 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம், ஓங்கூர் மற்றும் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்னனர். இதேபோல், வேலுார் மாதிரி பள்ளி, முகையூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருநாவலுார் போன் நேரு மேல் நிலைப் பள்ளி, முகையூர் புனித பீட்டர் பால் பள்ளி, செஞ்சி ஜானக்கியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி சாராத மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலுார் ஞானநந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுக்குப்பம் மனக்குல விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உளுந்து ார்பேட்டை புஷ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. களமருதுார் அருணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் புனித ஜான் சிறப்பு பள்ளி, விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முண்டியம்பாக்கம் ஆர்.எஸ்., ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் சாரதா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உளுந்துார்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உளுந்துார்பேட்டை எஸ்.ஆர்.கே.வி., குருகுல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி புனித மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேராப்பட்டு குட் செப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி மவுண்ட் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலம்பரை புனித ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வடக்கனந்தல் வான்மதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்