மோட்டார் தொழிலில்30 லட்சம் பேர் பாதிப்பு
சிவகங்கை; கொரோனா காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மோட்டார் தொழிலில் உள்ள 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து இந்திய வாகன ஓட்டுனர் பேரவை மாநிலத்தலைவர் கமலஹாசன் தெரிவித்ததாவது:தமிழகத்தில் பொது போக்குவரத்து வாகனங்கள் 4 மாதங்களாக செயல்படாமல் உள்ளன. மோட்டார் தொழிலில் உள்ள 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், மோட்டார் தொழிலில் உள்ள அனைவருக்கும் மாதம் 7500 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.சாலை வரி, எப்.சி., இன்சூரன்ஸ், பெர்மிட், லைசென்ஸ் போன்றவைகளுக்கு ஒரு ஆண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த கோரி நேற்று( ஆக.,14ல்) அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என தெரிவித்தார்.