உள்ளூர் செய்திகள்

டெட் விலக்கு சட்ட திருத்தம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை: 'பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் செல்லையா வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான, டெட் தேர்வில், தேர்ச்சி மதிப்பெண்ணை, 35 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். இன்றைய பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில், அதை அறிவிக்க வேண்டும்.சிறப்பு, டெட் தேர்வு என்பது, ஆசிரியர்கள் தங்கள் பணியில் தொடர்வதற்கு தானே தவிர, புதிய பணி நியமனத்திற்கானது அல்ல.எனவே, இந்த தேர்வு எழுதும் அனைவருக்கும், ஒரே தேர்ச்சி மதிப்பெண்ணாக, 35 சதவீதம் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பணி காலத்திற்கு ஏற்ப மற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி அடிப்படையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண்டும்.கடந்த, 2012ம் ஆண்டுக்கு முன், பணியில் சேர்ந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பாதுகாக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வர, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்