உள்ளூர் செய்திகள்

8 ஆயிரம் அரசு பள்ளி கட்டடங்கள் மோசம் அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை: தமிழகத்தில் பல அரசு பள்ளி கட்டடங்கள் மோசமாக உள்ளன. நடவடிக்கை எடுக்காமல் ஆழ்ந்த துாக்கத்தில் தி.மு.க., அரசு உள்ளது என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர் கபிலன் விளையாடிபோது மாடியில் இருந்து விழுந்ததில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டாக்டர் சரவணன் சந்தித்து நலம் விசாரித்த பின் கூறியதாவது: 37,579 அரசு பள்ளிகளில் 8 ஆயிரம் பள்ளி கட்டடங்கள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வந்த போது, அரசின் தரப்பில் 5583 பள்ளி கட்டடங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்து இதை சரி செய்வோம் என உறுதி அளித்தனர். இதுவரை எத்தனை பள்ளிகளை சரி செய்தார்கள் என புள்ளி விபரம் வெளியிடப்படவில்லை. 37,579 பள்ளிகளுக்கு ரூ.3758 கோடியை ஒதுக்கினால் சீர் செய்யலாம்.தற்போது மழைக்காலம் என்பதால் பல்வேறு பள்ளிகளில் சுவர்கள் விரிசல் விட்டும், மேல் பூச்சு விழுந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. ஆழ்ந்த துாக்கத்தில் உள்ள தி.மு.க., அரசு கட்டடங்களை ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்