உள்ளூர் செய்திகள்

சென்னையில் 8ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு காரணமாக, சென்னையில் நாளையும் (டிச., 8) பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச., 4 முதல் டிச., 7 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் டிச., 8ம் தேதியும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்