ஏப்ரல் 8க்குள் பள்ளி தேர்வை முடிக்க உத்தரவு
அரசு, சுயநிதி மற்றும் மாநகராட்சி உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 8ம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமாக, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியிலும், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்திலும் ஆண்டு இறுதித் தேர்வு முடியும். சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. அந்தந்த பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன்பே அரசு பள்ளிகளில் ஓட்டுச்சாவடி அமைக்கப்படும்.தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பள்ளி ஆண்டு இறுதி தேர்வை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தேர்வு நடக்கிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 28ம் தேதி தேர்வு துவங்க உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும் ஏப்ரல் 8க்குள் தேர்வை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.