உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் 8.5 லட்சம் இந்திய டாக்டர்கள்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த மருத்துவர்களுக்கான அமைப்பாக ஏ.ஏ.பி.ஐ., இயங்குகிறது. இதில் 42 ஆயிரம் மருத்துவர்களும் 15 ஆயிரம் மாணவர்கள் மற்றும் தங்கிப்படிப்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த 2004ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் 8 லட்சத்து 50 ஆயிரம் டாக்டர்கள் இருப்பதாகத் தெரியவந்தது. இந்தக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் உள்ள மொத்த டாக்டர்களில் 10 சதவீதம் இந்திய மருத்துவர்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இந்திய அமெரிக்கர்கள் என்பதுடன், ஏ.ஏ.பி.ஐ., அமைப்பில் ஒரு சிலர் பதியாமலும் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்தியர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில், மொத்த அமெரிக்க மருத்துவர்களில் 10 சதவீதம் இந்தியர்கள் என்பது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தரும் செய்தியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்