10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
சேலம்: பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், தர்மபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள், தர்மபுரி உள்பட அதன், 6 அண்டை மாவட்டங்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.குறிப்பாக சஜிந்தனா, கவிகுமரன், 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அதே போல் மோனிஷ்பிரணவ், அபூர்வ தயானி, 496; மிதுன்ராகுல், வைஷ்ணு, காவ்யதர்ஷினி, பிர-ணயா, 495; கவிஸ்ரீ, 494; தீபாஞ்சலி, ஸ்ரீநிதி, 493 மதிப்-பெண்கள் பெற்று, 2 முதல், 5 இடங்களை பிடித்தனர்.இவர்களை, செந்தில் கல்வி நிறுவன தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் தீபா, துணை கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஹிலாபானு உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், 18 மாணவர்கள், 490க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தவிர, 10ம் வகுப்பு மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.