உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ் விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த, 20ல் வெளியானது. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு அசல் மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேற்று முதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வழங்கும் பணி துவங்கியது. இதில் பிழை திருத்தம் தேவை எனில், பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து, பிழையை திருத்தி அசல் மதிப்பெண் பட்டியல் பெற்று கொள்ளலாம். அதே சமயம் பல மாணவ, மாணவியர், தாங்கள் படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 சேர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்