உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி

திருவாரூர் மாவட்டத்தில், தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, மதிப்பெண் பட்டியலில், நேர்க்கோடு விழுந்து, பிறந்த தேதி மற்றும் மதிப்பெண் தெளிவற்று இருந்தது. இதை அடுத்து, மாணவர்களிடம் வழங்கிய, 647 மதிப்பெண் பட்டியலை, திரும்ப பெற்று, சரி செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேலும், 180 மதிப்பெண் பட்டியலில், குளறுபடி உள்ளது கண்டறியப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது, விசாரணை நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்