10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 29,013 மாணவர்களில், 27,933 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மீதமுள்ள 1,080 மாணவர்களுக்கு வரும் ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன.இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஜூன் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.