உள்ளூர் செய்திகள்

10 குழந்தைகள் இருந்தாலும் பள்ளிக்கூட வசதி

மத்திய அரசு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது இச்சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டம், அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை துவங்க, அனைவருக்கு கல்வி இயக்கம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 கி.மீ., சுற்றளவில் பள்ளிகள் இல்லாத, 300 பேர் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளிகள் துவக்க வகை செய்யப்பட்டுள்ளது. அங்கு, 10 முதல், 20 பேர் வரை பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருந்தாலே போதுமானது. குடியிருப்புவாசிகளோ, தன்னார்வலர்களோ, மகளிர் சுயஉதவிக் குழுவினரோ இதற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான இடத்தை அவர்கள் வழங்கவேண்டும். அதில் வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கவும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பகுதிக்கு புதிதாக துவக்கப் பள்ளி வேண்டுவோர், அந்தந்த மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்