1,00,950 மாணவ-மாணவியர் பிளஸ் 2 தேர்வில் தோல்வி
சென்னை: பிளஸ் 2 தேர்வு துவங்குவதற்கு முன், ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 545 பேர், தேர்வை எழுத உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்தது. ஆனால், நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, 7,002 பேர் தேர்வெழுதாமல் "ஆப்சென்ட்" ஆகியுள்ளனர். தேர்வெழுதிய ஏழு லட்சத்து 16 ஆயிரத்து 543 பேரில், ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள, ஒரு லட்சத்து 950 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்விடையந்த மாணவர்கள் மட்டும் ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். இந்த வகையில், 50 ஆயிரம் பேர் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.