ரூ.1,300 கோடியில் சென்னையில்தேசிய கடல்சார் பல்கலைக்கழகம்!
செம்மஞ்சேரியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய பல்கலைக்கழகம் அமையும். சென்னையில் இந்த புதிய பல்கலைக்கழகம் அமைவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள தேசிய கடல்சார் அகாதெமியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததும் 18 மாதங்களில் இந்தப் புதிய பல்கலைக்கழகம் தொடங்குவற்கான பணிகள் நிறைவடையும் என்றார்.