133 மையங்களில் யூ.டி.சி., தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணி யிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.46,001 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்துத் தேர்வு புதுச்சேரி-107, காரைக்காலில் -13, மாகியில்- 5 மற்றும் ஏனாமில்- 8 என, மொத்தம் 133 மையங்களில் நேற்று நடந்தது. நுழைவு வாயில்களில் தீவிர சோதனை செய்தனர். தேர்வு அலுவலர்கள் ஹால்டிக்கெட்டுடன் தேர்வர்களின் ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி, பான் கார்டு ஆகியவற்றுள் ஒன்றின் அசலை பெற்று உறுதி செய்தனர். மொபைல் போன், புளு டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் ஆகியவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10:00 மணிக்கு பின் காலதாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதியம் 12:00 மணி வரை தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 38,067 பேர் தேர்வு எழுதினர். 82.75 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் - 31161, காரைக்கால் - 4177, மாஹி - 860, ஏனாம் 1869 பேர் எழுதினர்.கேள்விகள் எப்படிதேர்வர்கள் கூறுகையில், இந்த முறை யூ.டி.சி., கேள்விகள் சுலபமாகவே இருந்தது. என்.பி.எஸ்.சி., வினாத்தாள் போன்று இருந்தது. புதுச்சேரியை பற்றி இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. கேள்விகள் சுலபமாக இருந்தால் கட் ஆப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்றனர்.ஆன்சர் கீ எப்போது?நான்கு பிராந்தியங்களிலும் யூ.டி.சி.,போட்டி தேர்வு நடந்துள்ள சூழ்நிலையில் விடைத்தாள் மாகி, ஏனாம், காரைக்கால் பிராந்தியங்களில் இருந்து நேற்றிரவு புதுச்சேரி கொண்டு வரப்பட்டது. இன்று யூ.டி.சி., தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியிடப்பட உள்ளது.அரசு எச்சரிக்கைதேர்வு நேர்மையாக நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என, அரசு எச்சரித்துள்ளது.