156 பள்ளிகளில் காலை உணவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 1 - 8 வகுப்பு வரை பயிலும் 53,686 மாணவர்களுக்கு, 156 பள்ளிகளில் இத்திட்டத்தின் கீழ் தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை, மதிய உணவுத் திட்டங்களைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, பள்ளிகளில் உணவு தயாரிக்கும் இடம், சமையல் பாத்திரங்கள், குடிநீர் ஆகியவற்றின் தூய்மை மற்றும் உணவு வழங்கப்படும் சுகாதாரமான சூழலை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் தலைமை ஆசிரியர் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.