உள்ளூர் செய்திகள்

2ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகம்

கோவை: கோவை கல்வி மாவட்டத்தில் 396 ஆரம்பப்பள்ளிகள், 134 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. மாவட்ட தொடக்க கல்வித்துறைக்கு பெறப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள், ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் உள்ள மையத்தில் இருந்து, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், அன்னுார், சூலுார், பேரூர், கோவை நகரம், தொண்டாமுத்துார் உள்ளிட்ட 8 ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பப்பட்டு, காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.கல்வித்துறையினர் தெரிவிக்கையில், 'ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, 56,970 இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, 60,623 நோட்டு புத்தகங்கள் எட்டு ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்