உள்ளூர் செய்திகள்

ஜி20 மாநாடு இன்று புதுடில்லியில் கோலாகல துவக்கம்

இந்தியாவின் தலைமையில் முதன்முறையாக நடைபெறும் இம் மாநாட்டில் இதன் உறுப்பு நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டநாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதிநிதகள் கலந்து கொள்கின்றனர்.உலகளாவிய தெற்கில் நிலவும் பிரச்னைகள், உக்ரைன் போரின் விளைவுகள், இருண்ட பொருளாதார சூழ்நிலை மற்றும் துண்டு துண்டாக கிடக்கும் புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற சில சிக்கலான சவால்களுக்கு விடை தேடி இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதுசிறப்பு அழைப்பாளர்கள்இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புதுடில்லி வந்துள்ளனர். மேலும், சர்வதேச நிதியம், உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் தலைவர்களும் புதுடில்லியில் குவிந்துள்ளனர்.இவர்கள் தவிர, ஜி - 20 அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாத வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், ஓமன், நைஜீரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இம்முறை சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.விழாக் கோலம்முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்தும் கவுரவம் நம் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், அதை மிகப் பெரிய அளவில் நடத்தி வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புதுடில்லி வந்திறங்கிய சர்வதேச தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. மாநாட்டுக்காக புதுடில்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாட்டில், உக்ரைன் விவகாரத்தில், மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யா - சீனாவுக்கும் இடையே எழுந்துள்ள மிகப் பெரிய கருத்து வேறுபாடு குறித்து, உலக தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்படுமா என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்க்க கோரிக்கைகடந்த சில ஆண்டுகளாகவே, சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் உரத்து ஒலிக்க துவங்கி உள்ளது. வளரும் நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்க கண்டம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. மேலும், 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்ரிக்க யூனியனை, ஜி - 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக, ஜி - 20 நாடுகளின் தலைவர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் அவர் கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பதில் கடிதம் எழுதினார்.எனவே, இந்த உச்ச மாநாட்டில், ஆப்ரிக்க யூனியனை ஜி - 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியா வைக்கவுள்ள கோரிக்கைக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய பிரச்னைகள் விவாதிப்புஇந்த மாநாட்டில், சர்வதேச கடன் கட்டமைப்பை மறுவடிவமைத்தல், வளரும் நாடுகளுக்கு கடன் உதவி அளிப்பது, கிரிப்டோ கரன்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறைபடுத்துவது போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, பருவநிலை நிதி, நிலையான வளர்ச்சி மற்றும் சுத்தமான எரிசக்தி போன்ற பிரச்னைகளில் இந்தியாவின் முன்மொழிவுக்கு இந்த மாநாட்டில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.ஜனாதிபதியின் இரவு விருந்துமாநாட்டு வருகை தந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் நம் நாட்டின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோர் இதில் கலந்து கொள்ள மாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அக்கட்சி ஆளும் கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் விருந்தை புறக்கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்