உள்ளூர் செய்திகள்

2025க்குள் 1 லட்சம் கோடி மதிப்பில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு

இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா பேசியதாவது:மீன்வளத்துறை எதிர்கொள்ளும் சவால்களை செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதிர்கொள்ள வேண்டும். மீன்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காண மொபைல் ஆப் ஒன்று சமீபத்தில் வெளிடப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மீனவர்களையும், மீனவ சமூகத்தையும் மேம்படுத்தும் வகையில், 2015ம் ஆண்டு நீலப் புரட்சிக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியாக உள்ளது. இதனை2025ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் பேசியதாவது:2014ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலத்தில் மீன்வளத்துறையில் ரூ.3,500 கோடி மட்டிமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இறால் ஏற்றுமதியில் உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா உள்ளது.சென்னை காசிமேடு உள்பட ஐந்து மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. காசிமேடு மீன்பிடித் துறைமுக பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2014ல் மீன்வளத்துறையில் 500 ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்போது 9 லட்சமாக அதிகரித்துள்ளன. மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் அட்டை திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் ஐ.சி.எம்.ஆர்., போன்ற மத்திய அரசின் அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டிலேயெ முதல் முறையாக தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு பேசினார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பலியான், மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர்கள், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மாநிலங்களின் மீன்வளத்துறை செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.மீன்வளம் சார்ந்த ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களில் சிறப்பாக செயல்படும் 10 நிறுவனங்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 18 மாநிலங்களில் 138 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ள 176 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டன. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் சுமார் 260 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் தேசிய மீன் விவசாயிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்