ஜன.23ல், சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை: "கிராம, நகர் இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் ஜன.23ல் சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் டி.முனுசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது: அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் முகாம் நடைபெறும். இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, முன் அனுபவம், ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றுகளுடன் வர வேண்டும், என்றார்.