உள்ளூர் செய்திகள்

26ம் தேதி 2315 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்

26ம் தேதியன்று கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட 2974 பேரில் 656 மாணவர்கள் வரவில்லை. வந்தவர்களில் 3 மாணவர்கள் எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாமலேயேச் சென்றுவிட்டனர். மீதமுள்ள 2315 மாணவர்கள் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்து, சேர்க்கை அனுமதி ஆணையைப் பெற்றுக் கொண்டனர். செவ்வாயன்று வராதோர் விழுக்காடு 22,06 ஆக இருந்தது. இதுவரை 56,752 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 10902 மாணவர்கள் வரவில்லை. 142 பேர் நிராகரித்துவிட்டனர். 45,706 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளனர். தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்