டிச.27 ல் ஆன்லைன் குறுக்கெழுத்துப் போட்டி
மதுரை: தமிழ்நாடு குறுக்கெழுத்து சங்கம் சார்பில் முதன்முறையாக திறந்தநிலை இணையதள மறைபொருள் குறுக்கெழுத்துப்போட்டி டிச.,27 காலை 11:00 முதல் டிச., 28 மாலை வரை ஆன்லைனில் நடக்கிறது.தமிழகத்தில் வசிக்கும் 12 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். கட்டணமின்றி www.crpticngh.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்தவுடன் பெயருடன் பாஸ்வேர்ட் தரப்படும். இதை பயன்படுத்தி போட்டி நாளன்று ஆன்லைனில் பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2வது பரிசாக இருவருக்கு தலா ரூ.5000, 3ம் பரிசாக நால்வருக்கு தலா ரூ.2500 வழங்கப்படும்.