28ல் கோட்டை முற்றுகை ஜாக்டோ ஜியோ முடிவு
சென்னை: அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோவின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை:தி.மு.க., அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பான வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. நெடுஞ்சாலைத்துறை, நிதி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர்கள் அடங்கிய குழு பேச்சு நடத்தியும், எந்த பயனும் இல்லை.கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வரும், 28ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டு நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.