உள்ளூர் செய்திகள்

டிச.,29 சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகள் தொகுதி VIII ல் அடங்கிய செயல் அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த ஜூலை 14ம் தேதி தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு வரும் டிச., 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள்/ ஒட்டுமொத்த தரவரிசை எண்/ இட ஒதுக்கீட்டு விதி/ காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் உள்ளிட்ட தகவல்களை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்