303 அரசு பள்ளிகளுக்கு புதிய வசதி
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் பலவற்றில் வசதிகள் மிகவும் குறைந்த அளவே உள்ளது. இப்பள்ளிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில், நபார்டு கடன் மூலம் சிறப்புதிட்டங்களை அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 303 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வகுப்புகள், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர் போன்றவை ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டது. இதற்காக சேலம், திருவாண்ணாமலை, கடலூர், கரூர், மதுரை, நீலகிரி, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையினர் மூலம் மேற் கொள்ளப்பட உள்ள இப்பணிகள் குறித்து, மதிப்பீடுகள் முடிந்துள்ளன. இத்திட்டம் மூலம், ராமநாதபுரத்தில் 14.70 கோடி ரூபாய் செலவில் 17 மேல்நிலைப்பள்ளி கள் பயன்பெறுகின்றன.பொதுப்பணித்துறை (கட்டடம்) முதன்மைபொறியாளர் மூலம், சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் செயற்பொறியாளர்களுக்கு, இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் ஆகஸ்ட்டில் துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.