305 இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு
அரசு மருத்துவக் கல்லூரியில் மீதமுள்ள 305 மருத்துவ இடங்களுககான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜுலை 30ம் தேதி முதல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1653 மருத்துவ இடங்களில், இதுவரை 1,348 இடங்களுக்கான மாணவ சேர்க்கை முடிந்து விட்டது. மாணவர்களும், தத்தமது சேர்க்கை அனுமதி ஆணையை பெற்றுக் கொண்டனர். அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. மீதமுள்ள 305 இடங்களுக்கான சேர்க்கை ஜுலை 6ம் தேதி நடைபெற்று வருகிறது. 6ம் தேதியுடன் அரசு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களில் இதுவரை 9 இங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தற்போது 76 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அதேப்போல, தமிழகத்தில் உள்ள 9 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதமுள்ள 611 இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.