உள்ளூர் செய்திகள்

33 ஆண்டாக 25 ரூபாய் சம்பளம்: ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!

உடனடியாக அவரை பணி நிரந்தரம் செசய்து, ஊதியத்தை அதிகரிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கஞ்ச்ரப்பரா என்ற பகுதியைச் சேசர்ந்தவர் பபியா குப்தா (55). இவர், கடந்த 1975ல் இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. கடந்த 1996வரை 25 ரூபாய் மட்டுமே அவர் சம்பளமாக பெற்று வந்தார். கடந்த 1996ல் அந்த பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியாக மாறியது. ஆனால் பபியாவின் பணி, நிரந்தரம் செசய்யப்படவில்லை. இதையடுத்து, தன்னை பணி நிரந்தரம் செசய்யக் கோரி, 2001ல் அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செசய்தார். பபியாவை பணி நியமனம் செசய்யும்படி, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 2006ல் பபியா மீண்டும் ஐகோர்ட்டை அணுகினார். கோர்ட் அதே உத்தரவை மீண்டும் பிறப்பித்தது. ஆனால், இதற்கும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து, சமீபத்தில் மூன்றாவது முறையாக பபியா, ஐகோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கல் செசய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட், நான்கு வாரங்களுக்குள் பபியாவை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், பிரணாப் குமார் என்ற ஆசிரியருக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டு, 15 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின், சமீபத்தில் தான் அவருக்கு நீதி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்