தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
திருக்கோவிலுார்: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு, வெல்' வினாடி வினா போட்டி அரகண்டநல்லுார் லஷ்மி வித்யாஷ்ரம் சீனியர் பள்ளியில் நடந்தது.போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரித்து 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டிக்கு, நிர்வாக அலுவலர் பாலாஜி வரவேற்றார்.போட்டியின் நிறைவாக 8ம் வகுப்பு மாணவிகள் கனிஷ்கா, பிருந்தா ஆகியோர் முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவிகள் சஞ்சனா, லக் ஷன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் நித்தியா துணை முதல்வர் உஷா கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பல பங்கேற்றனர். தலைமை பொறுப்பாளர் பாலசரண்யா நன்றி கூறினார்.