உள்ளூர் செய்திகள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் கிடைக்க மதுரையில் முகாம்

சென்னை: மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, கடன்கள் கிடைப்பதற்கான கடன் முகாமை, வரும், 25ம் தேதி மதுரையில், தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம் நடத்த உள்ளது.தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட ஆதரவுகளை, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம் வழங்குகிறது. மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, கடன் உதவி கிடைக்க, வரும், 25ம் தேதி மதுரையில், கடன் முகாம் நடத்தப்பட உள்ளது.இதில், முன்னணி வங்கிகள் பங்கேற்க உள்ளன. அவை, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கடன் பெற மேற்கொள்ள வேண்டிய வழிவகைள் குறித்து, தகவல் தெரிவிக்கும். கடன் முகாமில் பங்கேற்க விரும்புவோர், 'form.startuptn.in/MCAM' தளத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்