நீட் அல்லாத படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு; பி.டெக்., படிப்பில் 2,807 பேருக்கு சீட்
புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.நீட் அல்லாத படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 6,743 பேர் பதிவு செய்து, கல்லுாரி பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுத்திருந்தனர். இவர்களின் முன்னுரிமை தரவரிசைப்படி சென்டாக் பரிசீலனை செய்து இடங்களை ஒதுக்கியுள்ளது.பி.டெக்., படிப்பில் 2,807 பேருக்கும், கலை அறிவியல் படிப்பில் 2,370 பேருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இதர தொழில் படிப்புகளுக்கும் சென்டாக் இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த உத்தேச சீட் ஒதுக்கீடு பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் உள்ளே நுழைந்து இன்று 4ம் தேதி காலை 10 மணிக்குள் தெரிவிக்கலாம்.சீட் கிடைத்த மாணவர்கள் வரும் 8ம் தேதி மாலை 5:00 மணிக்குள், அசல் சான்றிதழ்களுடன் கல்லுாரியை அணுகி சேர வேண்டும். உதவிக்கு மாணவர்கள் 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் தெரிவித்துள்ளது.