உள்ளூர் செய்திகள்

ரெப்கோ வங்கி கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் ஒப்படைப்பு

பந்தலுார்: ரெப்கோ வங்கியின் தலைவர் சந்தானம் மற்றும் ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ் ஆகியோரின் அறிவுரையின் பேரில், ரெப்கோ வங்கியில், 'அ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளவர்களின், பள்ளி மற்றும் கல்லுாரியில் படிக்கும் குழந்தைகளுக்கு, சிறப்பு நலத்திட்டம் வழங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன் தலைமையிலான குழுவினர் சேகரித்தனர். பெறப்பட்ட, 2000 விண்ணப்பங்களை, வங்கி மேலாளர் விஸ்வநாதனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், வக்கீல் கணேசன், ரமேஷ், ஜோதிவேல், சசிகலா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்