பெர்க்ஸ் மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை
பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்களான சஷ்டி பிரனேஷ் (3ம் வகுப்பு - அ) மற்றும் மாணவி சிவானி (10ம் வகுப்பு) ஆகிய இருவரும் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.மாணவர் சஷ்டி பிரனேஷ் இரண்டு நிமிடங்களில் 120 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டும், மாணவி சிவானி யோகாசனத்தில் விருச்சிக ஆசனத்தை தொடர்ந்து இரண்டு நிமிடங்களும், சக்கராசனத்தை தொடர்ந்து ஒரு நிமிடமும் செய்து அபாரமான திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.மாணவர்களை பள்ளி தாளாளர் உஷா, முதல்வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.