உள்ளூர் செய்திகள்

அக்னிவீர் திட்டம் ஆள்சேர்ப்பு பணி

உடுமலை: கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில், அக்னிவீர் ஆள்சேர்ப்பு பணி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் வரும் 25ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.ஆள்சேர்ப்பு தொடர்பாக சந்தேகம், உதவி போன்ற விபரங்களுக்கு, கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை, 0422 2222022 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்