பட்டம் இதழ் திறந்த சிந்தனை கதவு
திருப்பூர்: 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. போட்டிக்கு சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.வாசிப்பு ஆர்வம், சிந்தனை திறனை மேம்படுத்த 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. பள்ளி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இறுதியில் வெற்றி பெறும் அணிக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. கோவை, திருப்பூர், நீலகிரியில் 160க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன.திருப்பூர் மாவட்ட அரையிறுதி சுற்றின் ஒரு பகுதியாக ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டி நடந்தது. 200 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் 'எப்' அணியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் முகிலன், 11ம் வகுப்பு மாணவர் ரகுபிரசாத் முதலிடம் பிடித்தனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.படிக்க சுவாரசியம்முகிலன், மாணவர்:'பட்டம்' இதழின் வினாடி வினா, கணிதம், அறிவியல், ஏ.ஐ. மற்றும் வானிலை தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. இதழை முழுமையாக படிக்கும் ஆர்வத்தை போட்டி ஏற்படுத்தியுள்ளது.புதிய அனுபவம்ரகுபிரசாத், மாணவர்:போட்டி புதிய அனுபவமாக இருந்தது. 'பட்டம்' இதழை ஆழமாக படிக்க துாண்டியுள்ளது.நுாலகமாக 'பட்டம்' இதழ்கள்கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர்:நான்கு ஆண்டுகளாக 'பட்டம்' இதழ் வாங்கி வருகிறோம். இதழ்களை சேகரித்து மாணவர்கள் நுாலகமாக பயன்படுத்துகின்றனர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹப் இணைந்து வழங்கும் 'பட்டம் 2026 - 27' வினாடி வினா போட்டி, திருப்பூர், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.