408 பேருக்கு லேப்டாப் வழங்கல்
தேனி: தமிழக அரசின் சார்பில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படுகிறது.இத்திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 408 மாணவர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் லேப்டாப் வழங்கினார்.மாவட்டத்தில் 2203 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், நகராட்சி தலைவர்கள் ரேணுப்பிரியா, சுமிதா பங்கேற்றனர்.