42,712 பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வழியே, வரும், 10ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் முன்கூட்டியே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வு மைய விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வில், 97 காலியிடங்களுக்கு, 42,712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.