உள்ளூர் செய்திகள்

6 மாதங்களாக சம்பளம் பெறாத கவுரவ விரிவுரையாளர்கள்

திருப்பூர்: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் ஒரு தரப்பினருக்கு, கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை; அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் 70 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன; பல கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடம் காலியாக இருந்ததால், பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. செமஸ்டர் பருவத்துக்குள் சிலபஸ் முடிக்கப்படாததால், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வாக, 1996ல் அரசு கல்லூரிகளில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். நடப்பாண்டில், ஜூன் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதமாக, தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என ஒரு தரப்பு கவுரவ விரிவுரையாளர்கள் வேதனைப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறுகையில், முதல் ஷிப்ட்டில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. சென்னையில் உள்ள இயக்குனரகத்தை தொடர்புகொண்டு கேட்டாலும், சரியான பதில் இல்லை. ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, ஜூலையில் இருந்து சம்பளம் வழங்கப்படும். இம்முறை தாமதம் நீடிக்கிறது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்