உள்ளூர் செய்திகள்

6 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் அடுத்த மாதம் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்டது. பள்ளிக்கல்வித் துறையில் 2,241 ஆசிரியர்களும் தொடக்கக் கல்வித் துறையில் 4,061 ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பள்ளிக் கல்வி துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அமைச்சர் பேசினார். வரும் கல்வியாண்டில் 1,005 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, 1,005 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 572 பள்ளிகளுக்கு 572 பணியிடங்கள், கடநத் இரண்டு ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 572 பள்ளிகளுக்கு 572 பணியிடங்கள் என மொத்தம் 1,577 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அடுத்த டுத்த மாதம் 6262 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன. அந்தப் பணியிடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்