உள்ளூர் செய்திகள்

65 வயது வரை பணிபுரிய அனுமதி

கோவை:பாரதியார் பல்கலையின் கீழ், தற்காலிக தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள், 65 வயது வரை பணிபுரிய சிண்டிகேட் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலையில், 300க் கும் மேற்பட்டவர்கள் தற்காலிக தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பணிக்கால வயதை உயர்த்த நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 65 வயது வரை பணியை தொடர சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 60 வயக்கு பின் ஆண்டுதோறும், மருத்துவ தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்