உள்ளூர் செய்திகள்

ரூ.75,000 வைப்பு நிதி பத்திரம் 19 மாணவர்களுக்கு வழங்கல்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், மாணவ, மாணவியருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, தலா, 75,000 ரூபாய் மதிப்பில் வைப்புநிதி பத்திரங்களை வழங்கினார். குறிப்பாக விபத்தில் உயிரிழப்பு, நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோரால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் என, 19 பேர், தனித்தனியே பெற்றுக்கொண்டனர். அதன்படி, 14.25 லட்சம் ரூபாய் மதிப்பில், வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.இதுகுறித்து மான்விழி கூறுகையில், பவர் பைனான்ஸ் நிறுவனத்தில், இந்நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், 21 வயது பூர்த்தியடைந்த முதல் மாதத்தில், வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்