8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்
சென்னை: எட்டாம் வகுப்பை பள்ளிகளில் படிக்காமல், தனி தேர்வராக எழுதுவோருக்கு, செப்., 29 முதல், அக்.,5 வரை தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், நாளை பிற்பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வு துறையின், www.dge.tn.gov என்ற இணையதளத்தில், தேர்வர்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.