உள்ளூர் செய்திகள்

88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கள்ளழகர் கோயில் நுாலகம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் 87 ஆண்டுகள் பழமையான நுாலகம் இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் (டிச.,29) 88வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.துணைக் கமிஷனர் ராமசாமி கூறியதாவது:இந்நுாலகமானது 1936 டிச.,29ல் மதராஸ் இந்து மத தர்ம பரிபாலன வாரிய கமிஷனர் சுந்தர ரெட்டி காருவால் திறந்து வைக்கப்பட்டது. ஆன்மிக, அரிய வகையான புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1941ன் கணக்கின்படி இந்நுாலகத்தில் ஆயிரம் புத்தகங்கள் இருந்துள்ளன.தற்போது பெரிய அளவில் ஆன்மிகப் புத்தகங்களுடன் தினசரி நாளிதழ், பக்தி வார, மாத இதழ்கள், அறநிலையத் துறை வெளியீடுகள் என பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. கோயில் நிர்வாகத்தால் நுாலகம் இன்றளவும்சிறப்பாக செயல்படுவதைகண்டு பலர் நுால்களை வழங்கி வருகின்றனர்.தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை திறந்திருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்