9 புதிய தடயவியல் வளாகம்
தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் கீழ், தற்போது போபால்-மத்திய பிரதேசம், சண்டிகர், காம்ரூப்-அசாம், ஹைதராபாத்-தெலுங்கானா, புனே-மகாராஷ்ட்ரா, தில்லி, கொல்கத்தா-மேற்குவங்கம் ஆகிய 7 இடங்களில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன. இவைதவிர, 32 மாநில தடய அறிவியல் ஆய்வகங்களும், 97 மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன. இந்நிலையில், மத்திய ஆய்வகங்களில் ரூ.126.84 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாக 6 தேசிய இணையவழி தடயவியல் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம், உத்திர பிரதேசம், பீகார், ராஜ்ஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் ரூ.1,309.13 கோடி மதிப்பீட்டில் 2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக தடய அறிவியல் வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.